தி.மு.க. பிரமுகர் உறவினர் கொலை: 5 பேர் கைது


தி.மு.க. பிரமுகர் உறவினர் கொலை: 5 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2018 3:00 AM IST (Updated: 9 Jun 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உறவினர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேல்குமார் (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளி. தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் உறவினரான இவர் சில தினங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சபா, சபரி, சேகர், திலிபன், அரிகரசுதன், ஜெயகுமார், காளி உள்பட 10–க்கும் மேற்பட்டவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் ஜெயகுமார்(24), திலீப்குமார்(23), காளீஸ்வரன்(23) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.


Next Story