மாவட்ட செய்திகள்

பாட்டவயல் சோதனைச்சாவடியை காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் போலீசார் பீதி + "||" + Pattavayal checkpoint The siege of wild elephants

பாட்டவயல் சோதனைச்சாவடியை காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் போலீசார் பீதி

பாட்டவயல் சோதனைச்சாவடியை காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் போலீசார் பீதி
பாட்டவயல் சோதனைச்சாவடியை இரவில் காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் போலீசார் பீதி அடைந்து வருகின்றனர்.

பந்தலூர்,

தமிழக– கேரள எல்லையில் பாட்டவயல் பகுதி உள்ளது. மாநில எல்லை என்பதால் போலீஸ் சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதனால் இரவு பகலாக போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த சோதனைச்சாவடி தகர கூரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் போலீசார் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் சிமெண்டு கட்டிடத்தில் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனிடையே அப்பகுதியில் அடர்ந்த வனம் உள்ளதால் காட்டு யானைகள் வந்து செல்லும் இடமாகவும் விளங்குகிறது. மேலும் சோதனைச்சாவடியை காட்டு யானைகள் இரவில் அடிக்கடி முற்றுகையிட்டு வருகிறது.

இதனால் போலீசார் பீதியுடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வருகிற சமயத்தில் சோதனைச்சாவடியில் அமர்ந்துள்ள போலீசார் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழலில் பணியாற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:–

பாட்டவயல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட வனத்துறையினரின் வாகனத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இதேபோல் தினமும் காட்டு யானைகள் அந்த வழியாக செல்லும் வாகனத்தை துரத்தி வருகிறது. இவ்வாறு பல்வேறு சூழலுக்கு மத்தியில் சோதனைச்சாவடியில் இரவு பகலாக போலீசார் பணியாற்றி வருகின்றனர். எனவே தகரத்தால் ஆன சோதனைச்சாவடி கூடாரத்துக்கு பதிலாக சிமெண்டு கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்புடைய செய்திகள்

1. நோயாளிகளிடம் தேவையற்ற சோதனைகளுக்கு பரிந்துரைக்காதீர்; டாக்டர்களுக்கு, துணை ஜனாதிபதி வேண்டுகோள்
நோயாளிகளிடம் தேவையற்ற சோதனைகள் செய்து வருமாறு பரிந்துரைக்காதீர்கள். பணியின் போது நோயாளிகளிடம் எப்போதும் இன்முகத்தோடு இருங்கள் என்று டாக்டர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.
2. வனப்பகுதியில் இருந்து பிரிக்கக்கூடாது என வழக்கு: “யானைகள் நாட்டில் வாழ்பவை அல்ல” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
வனப்பகுதியில் இருந்து யானைகளை பிரிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், “யானைகள் காட்டில் வாழ்பவை, நாட்டில் வாழ்பவை அல்ல” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
3. கர்நாடகாவில் அட்டகாசம் செய்த ‘ரவுடி ரங்கா’ யானை விபத்தில் உயிரிழப்பு
கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் மோதி ‘ரவுடி ரங்கா’ யானை உயிரிழந்தது.
4. காட்சிமுனையில் காட்டுயானைகள் முகாம்; சுற்றுலா பயணிகள் செல்ல தடை
வால்பாறை நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை சுற்றுலா தலத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் சுற்றுலாபயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
5. குன்னூர்– கேத்தி இடையே நிலக்கரி நீராவி என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி
குன்னூர்– கேத்தி இடையே நிலக்கரி நீராவி என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.