திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்


திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2018 4:30 AM IST (Updated: 13 Jun 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்,

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி அங்கு திருப்பூர் தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story