ஆத்தூர் அருகே மது போதையில் மகனால் தாக்கப்பட்ட பெண் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


ஆத்தூர் அருகே மது போதையில் மகனால் தாக்கப்பட்ட பெண் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Jun 2018 2:00 AM IST (Updated: 15 Jun 2018 8:01 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே மது போதையில் மகனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். இதையடுத்து மகனை கைது செய்த போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகநேரி, 

ஆத்தூர் அருகே மது போதையில் மகனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். இதையடுத்து மகனை கைது செய்த போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயை தாக்கிய மகன்

ஆத்தூர் அருகே பழைய காயலை அடுத்த புல்லாவெளி வைரவன் நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி அலமேலு (வயது 70). இவர்களுடைய மகன் அழகு மணவாளபெருமாள் (34). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.

கடந்த 12–ந்தேதி அலமேலுவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் சமையல் செய்யவில்லை. அன்று இரவில் அழகு மணவாளபெருமாள் மது குடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்றார். அப்போது அவர், வீட்டில் சாப்பாடு இல்லாததால் ஓட்டலில் சென்று சாப்பாடு வாங்கி வந்தார். ஆனால் அதனை தாயார் சாப்பிடவில்லை.

கொலை வழக்காக மாற்றம்

இதனால் ஆத்திரம் அடைந்த அழகு மணவாள பெருமாள் உருட்டு கட்டையால் தாயாரை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அலமேலுவை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஆத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து அழகுமணவாள பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story