நாமக்கல் மாவட்டத்திற்கு 21-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


நாமக்கல் மாவட்டத்திற்கு 21-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2018 11:15 PM GMT (Updated: 17 Jun 2018 9:20 PM GMT)

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 21-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவர் 22-ந் தேதி நாமக்கல்லில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகிற 21-ந் தேதி வருகை தர உள்ளார்.

22-ந் தேதி காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பயணியர் சுற்றுலா மாளிகையில் அவர் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளிக்க விருப்பம் உள்ளவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story