திருவாரூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


திருவாரூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:00 AM IST (Updated: 19 Jun 2018 11:54 PM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திருவாரூரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவாரூரில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு திட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

போராட்டத்தின்போது ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
1 More update

Next Story