கண்மாயில் மணல் கொள்ளை, வைகையில் நீர் திருட்டு, வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, கேள்விகளால் அதிகாரிகளை துளைதெடுத்த விவசாயிகள்
மதுரையில் உள்ள கண்மாய்களில் மணல் திருட்டு நடக்கிறது. வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. வைகையில் நீர் திருட்டு நடக்கிறது. அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று விவசாயிகள் அதிகாரிகளை விவசாயிகள் கேள்விகளால் துளைதெடுத்தனர்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
விவசாய பயன்பாட்டிற்காக கண்மாயில் இருந்து மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி தரப்பட்டது. இது மிக சிறந்த திட்டம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால், விவசாயிகள் மண் அள்ள அனுமதி கேட்டால், அனுமதி தருவதில்லை. ஆயிரம் காரணம் சொல்லி அதிகாரிகள் தட்டி கழிக்கிறார்கள். ஆனால் லஞ்சம் கொடுத்து விவசாயிகள் போர்வையில் அரசியல்வாதிகள் உடனடி அனுமதி வாங்குகிறார்கள். குடிமராத்து திட்டத்தின் கீழ் கண்மாய்கள் தூர்வாரப்படுகிறது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் அங்கு வெறும் மணல் கொள்ளை தான் நடக்கிறது. வெள்ளக்கல் அருகில் உள்ள கல்குளம் கண்மாய் உள்பட சில கண்மாய்களில் 6 மாதங்களுக்கு மேலாக மண் அள்ளி கொண்டு இருக்கிறார்கள். கண்மாய் தூர்வாருதல் என்பதே மணல் கொள்ளை தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
விவசாயிகளின் வாழ்வாதாரமே கண்மாய்கள் தான். ஆனால் இந்த கண்மாய்கள், ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை போன்றவற்றால் அழியும் நிலைக்கு வந்து விட்டது. மாடக்குளம், வண்டியூர், முத்துப்பட்டி, தென்கால் கண்மாய் உள்பட மாவட்டத்தின் அனைத்து கண்மாயிகளின் வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. நாங்களும் ஆயிரக்கணக்கான மனுக்கள் கொடுத்து விட்டோம். ஆனால் கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் ஏன் அகற்ற மறுக்கிறார்கள். அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?.
பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்கு தேனிக்கு 40 கன அடி நீரும், மதுரைக்கு 60 கன அடி நீரும் எடுக்க தான் அரசு அனுமதி தந்துள்ளது. ஆனால் தேனி மாவட்டத்திற்கு மட்டும் விதியை மீறி 100 கன அடி நீர் தருகிறார்கள். அதுமட்டுமல்ல, திறக்கும் தண்ணீரில் தேனிக்கு போக, மீதமுள்ள நீர் வைகை அணைக்கு வர வேண்டும். ஆனால் அப்படி வருவதில்லை. வரும் வழி முழுவதும் மின்மோட்டார் வைத்து வைகை நீரை திருடுகிறார்கள். தடுக்க வேண்டிய அதிகாரிகள், உடந்தையாக இருக்கிறார்கள். இதனால் மதுரை விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
அதுமட்டுமா, பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு நீர் வரும் வழியில் மட்டும் 23 குடிநீர் கேன் தயாரிப்பு நிலையங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் அதிகாரிகளின் துணையோடு, மதுரைக்கான நீரை திருடுகிறார்கள். பெரியாறு பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வருகிற 26-ந் தேதி தண்ணீர் திறப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே அன்றைய தினம் தண்ணீர் திறக்க வேண்டும். தண்ணீர் திறக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
மேலூர் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகத்தில் இருப்பதில்லை. எப்போது வருகிறார்கள், எப்போது போகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் அவர்கள் அந்த கிராமத்தில் தங்குவதில்லை. மேலும் மேலூர் தாலுகா அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதன்காரணமாக அங்கு மாலை நேர ஏஜெண்டுகள் உருவாகி உள்ளனர். அவர்கள் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்து கொண்டு இருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. எனவே லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த கால்வாய் மூலம் 33 கண்மாய்களுக்கு நீர் செல்ல வேண்டும். ஆனால் தற்போது 33 கண்மாய்களும் மாயமாகி விட்டது. எனவே முதலில் அதனை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனையும் மீட்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
விவசாயிகளின் பல கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினர். மேலும் பல துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு விவசாயிகள் கடும் கன்டணமும் தெரிவித்தனர். இருப்பினும் ஒவ்வொரு விவசாயிகளின் கேள்விகளுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் பதில்ளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும். அதற்கான காலக்கெடுவையும் விதிக்க வேண்டும். கண்மாயில் இருந்து மண் எடுக்கும் போது அனுமதி பெற்ற அளவை தான் எடுக்கிறார்களா என வருவாய் துறையினர் கண்காணிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமங்களில் தங்கி இருந்து சேவை செய்ய வேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், பாசனத்திற்காக வைகை அணை திறப்பது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. கலெக்டர் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார். எனவே நீர் திறப்பது குறித்து அரசிடம் இருந்து தகவல் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story