திருப்பூரில் குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர் உடைப்பை சரி செய்ய கோரிக்கை
தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தும் நிலையில், திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் பல மாதங்களாக வீணாகிறது. எனவே உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளிலும் 2-வது குடிநீர் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் தண்ணீரும், 3-வது குடிநீர் திட்டத்தின் கீழ் பவானி தண்ணீரும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆழ்குழாய் மூலமாகவும் உப்பு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒருசில பகுதிகளுக்கு இன்னும் 2-வது திட்ட குடிநீர் வசதியே இல்லாத நிலை உள்ளது. குடிநீர் சீராக வழங்கக் கோரி சில பகுதிகளில் உள்ள பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.
பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து 24 மணி நேரமும் குடிநீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக அவினாசி ரோட்டில் பெரியார்காலனி மீன் சந்தை அருகிலும், அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம்புதூர், அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி அருகிலும், அம்மாபாளையம் சோதனைசாவடி அருகிலும் மற்றும் கோபால்டுமில் பாரதிநகர் அருகிலும் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மாதக்கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது.
ஒருசில இடங்களில் அதிக அளவில் குடிநீர் வீணாகும்போது பொதுமக்கள் வாகனங்களை அங்கு கொண்டு கழுவுவதும், பாத்திரங்களில் தண்ணீர் மொண்டு எடுப்பதும், நடுரோட்டில் துணி துவைப்பது போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதேபோல் சாலையில் தொடர்ந்து வீணாகும் குடிநீரால் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. மேலும் சாலையோரம் அதிக அளவில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளுக்கு அது இடையூறாகவும் அமைந்து வருகிறது.
இதுகுறித்து அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர். ஆனால் அவினாசி ரோட்டில் பல மாதங்களாக பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரவும் பகலும் குடிநீர் வீணாகி வருகிறது. இந்த வழியாக உயர் அதிகாரிகள் பலமுறை சென்று வந்தாலும் குடிநீர் வீணாவதை இதுவரை தடுக்கவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுபோன்று குடிநீர் வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story