சாலையில் தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி


சாலையில் தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 28 Jun 2018 4:57 AM IST (Updated: 28 Jun 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உயிரிழந்தார்.

தானே,

தானே மாஜிவாடா பகுதியில் நேற்று அதிகாலை கன்டெய்னர் லாரி ஒன்று கோட்பந்தர் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

சாலையோரத்தில் உள்ள பெயர் பலகை மீது மோதிய அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீதும் மோதியது. பின்னர் அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கன்டெய்னர் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரபோடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவரது பெயர் ராஜேஸ் யாதவ் (வயது26) என்பது தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story