கும்மனூர் முதல் கங்கலேரி வரை ராஜகால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
கும்மனூர் முதல் கங்கலேரி வரை ராஜகால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளான சாலை அமைத்தல், பட்டா மாறுதல், கால்வாய் தூர்வாருதல், நிலப்பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு, மண்சாலை அமைத்தல், பஸ் வசதி உள்ளிட்ட மனுக்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 111 மனுக்கள் பெறப்பட்டதில், 96 மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர்கள் தீபக்பில்ஜி, பிரீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுசிலாராணி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாண்டியன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பட்டு உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய தொகை உடனே வழங்க வேண்டும். கும்மனூர் முதல் கங்கலேரி வரை ராஜகால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பாவக்கல் பகுதியில் சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை அகற்றி விட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும். தேன்கனிக்கோட்டை உழவர் சந்தையில் குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும். பாரூர் ஏரியில் தண்ணீர் திறக்க வேண்டும்.
சப்பாணிப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து தெருவிளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி பேசினர். அதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசுகையில், பாரூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story