தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பங்கேற்பு


தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 July 2018 5:11 AM IST (Updated: 1 July 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்து கொண்டார்.

திருப்பூர்,

தி.மு.க.வின் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் திருப்பூர் மாநகர தி.மு.க. சார்பில் டவுன்ஹால் வளாகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் மாநகர பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் வரவேற்று பேசினார். மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநகர துணை செயலாளர் சிட்டி கணேசன், மாநகர துணை செயலாளர் சுகன்யா லோகநாதன், மாநகர துணை செயலாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணை தலைவர் திண்டுக்கல் லியோனி, திரைப்பட நடிகர் வாசு விக்ரம், இறையன்பன் குத்தூஸ், தொ.மு.ச.பேரவை மாநில துணை தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழக மக்கள் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் தமிழக அரசை கண்டித்தும், மக்களுக்கு எதிரான திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி வரும் மத்திய அரசு தங்கள் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினார்கள்.

நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை வைத்து பா.ஜனதா ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. தமிழகத்தில் நிச்சயம் பா.ஜனதா காலூன்ற முடியாது என்றும் பேசினார்கள்.

முன்னதாக கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மாவட்ட அவைத்தலைவர் திருமூர்த்தி, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமார், மாவட்ட துணை செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் ரத்தினசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story