குடிபோதையில் தகராறு செய்ததால் தமிழக கார் டிரைவர் கழுத்தை நெரித்து கொலை
பெங்களூருவில், குடிபோதையில் தகராறு செய்ததால் தமிழக கார் டிரைவர் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன், தற்கொலை நாடகமாடிய மனைவி, மகன்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு சந்திரா லே-அவுட் அருகே அருந்ததி நகரில் வசித்து வந்தவர் பழனிவேல்(வயது 44). இவரது மனைவி கவிதா(37). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனிவேலின் சொந்த ஊர் தமிழ்நாடு தர்மபுரி ஆகும். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பழனிவேல், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி கவிதாவிடம் தகராறு செய்து வந்து உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டை உண்டானது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பழனிவேல், கவிதாவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து பழனிவேல் தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் கவிதாவும், அவரது மகன்களும் சேர்ந்து பழனிவேலின் கழுத்தை நெரித்ததாக தெரிகிறது. இதில் அவர் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பழனிவேலின் உடலை கொண்டு சென்ற கவிதாவும், அவரது மகன்களும் பழனிவேல் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், இதில் மயக்கம் அடைந்த அவரை சிகிச்சைக்கு கொண்டு வந்ததாகவும் டாக்டரிடம் கூறினார்கள். அப்போது பழனிவேலை பரிசோதித்த டாக்டர் அவர்ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதன்பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் பழனிவேலின் உடலை தனியார் ஆம்புலன்சில் வைத்து தர்மபுரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதுபற்றி சந்திரா லே-அவுட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ஆம்புலன்சை பின்தொடர்ந்து சென்று மடக்கினர். பின்னர் அதில் இருந்த பழனிவேலின் உடலை கைப்பற்றி விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதன்பின்னர் கவிதா, அவரது மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் தகராறு செய்ததால் பழனிவேலை கழுத்தை நெரித்து கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மேலும் அவர் தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடியதாகவும், போலீசுக்கு தெரியாமல் அவரது உடலை தர்மபுரிக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சந்திரா லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதா, அவரது மகன்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story