கவுரிலங்கேஷ் கொலையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு தொடர்பு? ஆதாரங்களை திரட்டும் பணியில் சிறப்பு விசாரணை குழு தீவிரம்

கவுரிலங்கேஷ் கொலையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு தொடர்பு? ஆதாரங்களை திரட்டும் பணியில் சிறப்பு விசாரணை குழு தீவிரம்
x
தினத்தந்தி 5 July 2018 3:00 AM IST (Updated: 5 July 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு தொடர்பு இருக்கலாம் என கருதிய சிறப்பு விசாரணை குழு அதுதொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பெங்களூரு,

கவுரி லங்கேஷ் கொலை

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5–ந் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கவுரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக நவீன்குமார், பிரவீன் என்ற சுஜீத்குமார், அமுல் காலே, மனோகர், பிரதீப், பரசுராம் வாக்மோர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைதான 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்திய சிறப்பு விசாரணை குழுவினர், அவர்கள் 6 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து உள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கவுரி லங்கேஷ் கொலையில் மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கு தொடர்பு?

அதாவது, கவுரி லங்கேசை கொலை செய்யும்படி அமுல் காலேவுக்கு மாதந்தோறும் ரூ.1.25 லட்சம் வழங்கப்பட்டு வந்து உள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் கவுரி லங்கேசை கொலை செய்யும்படி அமுல் காலேவுக்கு 4 பேர் உத்தரவு பிறப்பித்ததும் தெரியவந்துள்ளது. இந்த உத்தரவின்பேரில் கவுரி லங்கேசின் படுகொலை நிகழ்த்தப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவல்கள் சிறப்பு விசாரணை குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், அமுல் காலேவுடன் தொடர்பில் இருந்த 4 பேர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை திரட்ட சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த 4 பேரில் ஒருவர் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்று கூறப்படுகிறது.

Next Story