பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி


பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 6 July 2018 10:30 PM GMT (Updated: 6 July 2018 9:30 PM GMT)

பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய கடன் தள்ளுபடி

பெங்களூரு மாநகராட்சி கூட்டம், மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மேயர் சம்பத்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர், கமி‌ஷனர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் ஆளுங்கட்சி தலைவர் சிவராஜ் எழுந்து, “விவசாயிகளின் நலனுக்காக எனது ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறேன்“ என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மேயர் சம்பத்ராஜ், “நானும் 2 மாத சம்பளம் விவசாயிகளுக்காக வழங்குகிறேன்“ என்று அறிவித்தார்.

அதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி எழுந்து, நான் ஒரு மாத சம்பளத்துடன் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்குகிறேன் என்றார். அனைத்து கவுன்சிலர்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை விவசாயிகளின் நலனுக்கு வழங்குவது என்று முடிவு எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து பேசிய ஆளுங்கட்சி தலைவர் சிவராஜ், “முதல்–மந்திரி குமாரசாமி சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 6 உயர்த்தப்பட்ட மேம்பால சாலைகள் அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கம், பெல்லந்தூர் ஏரியை தூய்மைப்படுத்த நிதி உதவி, நகரில் 100 வாகன பேட்டரி ‘சார்ஜிங்‘ நிலையங்கள் அமைப்பதாக கூறப்பட்டுள்ளது. மாநில அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது. பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் 110 கிராமங்கள் உள்ளன. அந்த விவசாயிகள் இதனால் பயன் அடைவார்கள்“ என்றார்.

பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கூட்டம் நடந்து கொண்டிருந்போது, காங்கிரசை சேர்ந்த கவுன்சிலர் ரூபா லிங்கேஸ்வர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை சக கவுன்சிலர்கள் காரில் அழைத்துக் கொண்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


Next Story