மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் சோதனை + "||" + Have banned items? Police checked at the Palayankottai Central Jail

தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் சோதனை

தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் சோதனை
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? என போலீசார் நேற்று சோதனை செய்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? என போலீசார் நேற்று சோதனை செய்தனர்.

சிறையில் திடீர் சோதனை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் உள்பட சுமார் 1500–க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த கைதிகள் அறைகளில் இருந்து காலை 6 மணிக்கு திறந்து விடப்பட்டு, மாலை 6 மணிக்கு அடைக்கப்படுவார்கள்.

அங்கு பீடி, சிகரெட், செல்போன், கஞ்சா ஆகிய தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருக்கிறதா? என அவ்வப்போது மாநகர போலீசார் சோதனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேந்தர்குமார் ரத்தோட் உத்தரவின் படி, துணை கமி‌ஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில் உதவி போலீஸ் கமி‌ஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சிறை வளாகத்தில் நேற்று திடீரென்று சோதனை செய்தனர்.

போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். கழிவறை, குளியலறை மற்றும் மைதானங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஒரு சில கைதிகளிடமும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை சுமார் 1½ மணி நேரம் நடந்தது. ஆனால் சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஏற்பாடு

மேலும் சிறையின் சுற்றுப்புறங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. போலீசார் சோதனை செய்த போது சிறை பகுதியை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.தொடர்புடைய செய்திகள்

1. உடுமலை, குடிமங்கலம் பகுதியில் மின்தடையால் ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி கடும் பாதிப்பு
உடுமலை, குடிமங்கலம் பகுதியில் மின்தடையால் ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன.
2. தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு: அரிச்சல்முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால் அரிச்சல்முனை கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
3. ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் பழுதடைந்த தொங்கு பாலத்துக்கு பூட்டு
ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் பழுதடைந்த தொங்கு பாலத்துக்கு பூட்டு போடப்பட்டு உள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
4. பான்பராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்றால் நடவடிக்கை, போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பான்பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
புதுவையில் சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்தனர்.