மாவட்ட செய்திகள்

பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை + "||" + Heavy hurricane wind Fishermen are banned to catch fish

பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை

பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். இதேபோல பாம்பன் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறவாளி காற்று வீசியது.

இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தாயராகி இருந்தனர். ஆனால் மீன் துறை அதிகாரிகள் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை வந்துள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் வழங்காமல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்தனர்.

இந்த திடீர் தடை உத்தரவால் 100–க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென்கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தெற்குவாடி துறைமுக பகுதியிலேயே நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்துறை அதிகாரிகளின் தடை உத்தரவால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நேற்று சுமார் 1000–த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். இதேபோல மண்டபம் பகுதியிலும் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 50–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், 2–வது நாளாக 800–க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. கோவில்பட்டி பகுதியில் 17–ந்தேதி மின்தடை ஏற்படும் ஊர்கள்
கோவில்பட்டி பகுதியில் வருகிற 17–ந்தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
2. கஜா புயல் எதிரொலி: பாம்பனில் அலைகள் குறைந்து கடல் அமைதியானதால் பரபரப்பு
கஜா புயல் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று பாம்பனில் வழக்கத்துக்கு மாறாக கடல் திடீரென அமைதி நிலைக்கு மாறியது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
3. கஜா புயல் எதிரொலி: ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது வருகிற 15–ந்தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 2–வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
4. மனைவி இறந்ததால் மனவேதனை: மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுவை தேங்காய்த்திட்டு அருகே மனைவி இறந்ததால் மனவேதனை அடைந்த மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5. வித்தியாசமான பந்து வீச்சுக்கு நடுவர் தடை விதித்ததால் பரபரப்பு
சி.கே.நாயுடு கோப்பைக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் (23 வயதுக்குட்பட்டோர்) பெங்கால்–உத்தரபிரதேச அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது, ஷிவா சிங் என்ற பந்து வீச்சாளர் வித்தியாசமான முறையில் பந்து வீசினார்.