மதுரையில் மசாஜ் சென்டரில் ‘ஹைடெக்’ விபசாரம்; பெண் உள்பட 9 பேர் சிக்கினர்
மதுரையில் மசாஜ் சென்டரில் ‘ஹைடெக்’ விபசாரம் செய்த பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரையில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தனர்.
அப்போது மதுரை கேட்லாக் ரோட்டை சேர்ந்த சுந்தர்சிங் பை–பாஸ் ரோடு வானமாமலை நகர் பகுதியில் நடந்து சென்றார். அவரை ஒருவர் வழி மறித்து இந்த வீட்டில் மசாஜ் சென்டர் உள்ளதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றார். அங்கு அவரை விபசாரம் செய்வது தெரிந்ததும், அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். பின்னர் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்தார்.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையிட்ட போது மசாஜ் சென்டர் பெயரில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. அதை தொடர்ந்து மதுரை நிலையூர் ரெங்கராஜ்(வயது 33), புதுச்சேரி அருண்குமார்(25), தபால்தந்தி நகர் அரவிந்த்(36), சம்மட்டிபுரம் சையது ரகீம்(23), அன்சாரிநகர் இப்ராகிம்ஷா(27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள், 6 செல்போன், ஸ்வைப் எந்திரம் மற்றும் 32,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கிருந்து 2 பெண்களை மீட்டனர். மேலும் வீட்டை வாடகைக்கு விட்ட உரிமையாளர் ராஜகோபாலை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதேபோல் பை–பாஸ் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த ஜீவபிரியதர்ஷினி(30) என்பவர் அந்த மசாஜ் சென்டரை நடத்தி வருவது தெரியவந்தது. அதை தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவபிரியதர்ஷினி, உசிலம்பட்டி சசிகுமார்(32), சொக்கிகுளம் விக்னேஸ்வரன்(30), விருதுநகர் பிரின்ஸ்(35) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 46 செல்போன்கள், ஸ்வைப் எந்திரம், 32,660 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கிருந்த வடமாநில பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஒரே நாளில் 2 இடங்களில் ‘ஹைடெக்‘ காகவிபசாரம் செய்த பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.