மாவட்ட செய்திகள்

ஆரணி உட்கோட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார் + "||" + The construction of the road at a cost of Rs 21 crore in Aranyalai - Minister has started

ஆரணி உட்கோட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆரணி உட்கோட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஆரணி உட்கோட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
ஆரணி,

செய்யாறு நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பராமரிப்பு கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஆரணி உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகளை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.21 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்குவதற்காக சிறப்பு பூஜைகள் ஆரணி, இரும்பேடு கூட்ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் நடந்தது.


இதையடுத்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் கே.பி.சங்கர், உதவி கோட்ட பொறியாளர் எ.கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் வ.செல்வநாதன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனுக்கும், எம்.பி., எம்.எல்.ஏ., அதிகாரிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் அ.கோவிந்தராசன், பி.லட்சுமணன், என்.ஆர்.எம்.ராகவன் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆற்காடு - விழுப்புரம் நெடுஞ்சாலையில் சுமார் 3 கோடியே 3 லட்சம் மதிப்பில் சாலைகளை விரிவாக்கம் செய்து தார்சாலை அமைக்கும் பணிகளும், கண்ணமங்கலம் - ஆரணி சாலையில் அடையபுலம், ராட்டினமங்கலம் சாலைகள் ரூ.60 லட்சம் மதிப்பிலும், அக்ராபாளையம் முதல் எஸ்.யு.வனம் சிறுமூர் தார் சாலை ரூ.1 கோடியே 30 லட்சம் செலவிலும் உள்பட மொத்தம் 64.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளை அகலப்படுத்தியும், கல்வெட்டுகள் அமைத்தும் தார்சாலை அமைக்கும் பணிக்காக சுமார் ரூ.21 கோடியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இரும்பேடு இந்திராகாந்தி சிலையில் இருந்து ஆரணி எம்.ஜி.ஆர். சிலை வரை சென்டர்மீடியன் அமைத்து தெருவிளக்குகள் அமைக்க ரூ.50 லட்சமும், ஆரணி நகர எல்லைகளான இரும்பேடு இந்திரா காந்தி சிலையை மையப்படுத்தி ரவுண்டானா (சர்க்கிள்) பாதை அமைக்கப்படுகிறது. மாங்காமரம் பஸ் நிறுத்தம், சேவூர் பைபாஸ்சாலை, முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை, வந்தவாசி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலை, ஆரணி அண்ணா சிலை அருகிலும் தலா ரூ.50 லட்சம் வீதம் ரவுண்டானா அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கோவிந்தராசன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வக்கீல் கே.சங்கர், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, பாசறை நிர்வாகி பி.ஜி.பாபு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் கருணாகரன், ரமணி, மாவட்ட அவைத்தலைவர் ஜெமினி கே.ராமச்சந்திரன், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, பச்சையப்பன், செல்வராஜ், ராகவன், கிருஷ்ணன் உள்பட ஏராளமான கட்சி பொறுப்பாளர்களும், அனைத்துத் துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோக பணியை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் குடிநீர் வினியோகம், சாலைப்பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
2. முதல்– அமைச்சர்களை மதிக்காத ஒரே பிரதமர் மோடிதான் - நாராயணசாமி குற்றச்சாட்டு
மாநில முதல்–அமைச்சர்களை மதிக்காத ஒரே பிரதமர் மோடிதான் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. தடைகளை மீறி ஜனவரி முதல் மீண்டும் இலவச அரிசி அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
தடைகளை மீறி ரே‌ஷன் கடைகள் மூலம் வருகிற ஜனவரி மாதம் முதல் மீண்டும் இலவச அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
4. பெண்கள் பாதுகாப்புக்கு 181 இலவச தொலைபேசி சேவை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
பெண்கள் பாதுகாப்புக்கு என்று 181 இலவச தொலைபேசி சேவையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
5. ஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்தில் மாற்றப்படும் என்று அறிவித்த அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.