பருவமழை தீவிரம் 4 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


பருவமழை தீவிரம் 4 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 16 July 2018 3:15 AM IST (Updated: 16 July 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. ஊட்டி, கூடலூர், பந்தலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஊட்டியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஆனால், குன்னூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்.


Next Story