செல்போனில் பேசி கொண்டிருந்த ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
பாடங்களை சரியாக நடத்தாமல் செல்போன் பேசி கொண்டிருந்த முதுகலை ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் சரியாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவது இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதைத்தொடர்ந்து நேற்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தானிப்பாடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலில் அவர் தலைமை ஆசிரியர் அறையில் வருகை பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் அவர் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் கண்டறிய நேரடியாக வகுப்பு வாரியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடம் ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துகிறார்களா? என்று கேட்டறிந்தார். மாணவர்கள், முதுகலை கணித மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவது இல்லை என்றும், பாட நேரத்தில் செல்போனில் பேசி கொண்டு இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
மேலும் கணித ஆசிரியர் பாட புத்தகத்தில் உள்ள எடுத்துக்காட்டு கணக்குகளை மட்டும் செய்து காண்பித்து விட்டு மற்ற கணக்குகளை தங்களை செய்ய சொல்வதாகவும், சந்தேகம் கேட்டால் அடிப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
அதேபோல் ஆங்கில ஆசிரியரும் அடிக்கடி செல்போனில் பேசுவதாகவும், அடிப்பதாகவும் புகார் தெரிவித்தனர். புகார்களை முதன்மை கல்வி அலுவலர் மாணவர்களிடம் இருந்து எழுத்துபூர்வமாக பெற்று கொண்டார். மாணவர்களின் புகார்கள் குறித்து தலைமை ஆசிரியரிடம் அவர் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், முதுகலை ஆசிரியர்கள் சாண்டில்யன் (கணிதம்), தங்கமுருகன் (ஆங்கிலம்) ஆகியோர் சரியாக பாடம் நடத்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து சாண்டில்யன் மற்றும் தங்கமுருகனை முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், மாணவர்களை அமைதியாக இரு என்று ஆசிரியர்கள் அடிக்க கூடாது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பாடம் நடத்தினால் மாணவர்கள் ஈர்க்கப்பட்டு அமைதியாக பாடம் கவனிப்பார்கள். அவ்வாறு தான் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். பாட வேளையில் ஆசிரியர்கள் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பது நமது கடமை என்று ஆசிரியர்கள் புரிந்து கொண்டு, மாணவர்களை அடிக்காமல், திட்டாமல் சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றார்.
கடந்த 24-ந் தேதி செங்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் முகமது மைனுதீன், நேற்று முன்தினம் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள் சம்பத், முருகன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story