இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை மீட்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை மீட்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 July 2018 4:00 AM IST (Updated: 29 July 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை மீட்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமாரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள பைபர்கிளாஸ், நாட்டுப்படகுகளை நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வாடகைக்கு எடுத்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளிவயல் தோட்டத்தை சேர்ந்த செய்புல்லா(48), அப்துல்ரஹ்மான்(50) ஆகியோருக்கு சொந்தமான படகுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாகை மாவட்டம் தரங்கம்பாடி, நாகூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் 7 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது.

மீனவர்களிடம் இருந்து படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இலங்கை கடற் படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 7 பேரும் அங்கு உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் மாநில மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன், விசைப்படகு மீனவர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் வடுகநாதன் மற்றும் மீனவர்கள் கோவிந்தராஜ் எம்.எல்.ஏ., சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் குழ.சுந்தர்ராஜன் ஆகியோருடன் சென்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக் குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 7 பேரையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story