பெரம்பலூர் நீதிமன்றத்தில் இரவுக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு எழுத்துத்தேர்வு; 11-ந்தேதி நடக்கிறது
பெரம்பலூர் நீதிமன்றத்தில் இரவுக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு எழுத்துத்தேர்வு வரும் 11-ந்தேதி நடைபெற உள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- கடந்த 2016-17-ம் ஆண்டில் இரவுக்காவலர், மசால்சி மற்றும் ஜெராக்ஸ் இயக்குபவர் பணிகளுக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணியளவில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.
நேர்முகத்தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் நீதிமன்ற இணையதளத்தில் ec-ourts.gov.in/tn/pe-r-a-m-b-a-lur வெளியிடப்பட்டுள்ளது. அப்பெயர்பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story