அகில இந்திய மீனவர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


அகில இந்திய மீனவர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2018 3:45 AM IST (Updated: 4 Aug 2018 8:52 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம்,

அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் தமிழக மீனவர்கள் தங்களின் மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் ராமேசுவரம் பஸ்நிலையம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில மீனவரணி பொறுப்பாளருமான பாம்பன் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் பிரதாபன், செயல் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சபாபதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட துணை தலைவர் துல்கீப், ராமேசுவரம் நகர் காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, புதுச்சேரி மீனவர் காங்கிரஸ் தலைவர் காங்கேயன், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, துணை செயலாளர் பொருள்ராஜ், மீனவர் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், தேவதாஸ், சேசு, எமரிட், சகாயம் உள்பட 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 தொடர்ந்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் கூறும்போது, இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டுள்ள 187 படகுகளும் முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு படகுக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடாக மத்திய–மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story