காமராஜர் பற்றி அவதூறான கருத்து வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் நாடார் மகாஜன சங்கத்தினர் புகார் மனு
காமராஜர் பற்றி அவதூறான கருத்து வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என நாடார் மகாஜன சங்கத்தினர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட நாடார் மகாஜன சங்க கவுரவ தலைவர் மாரியப்பன் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் சார்பில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:–
தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர் பல்வேறு கல்வி புரட்சியை செய்து உள்ளார். அவர் பல்வேறு அணைகளை கட்டி உள்ளார். பல்வேறு சாதனைகளை படைத்த காமராஜரை பற்றி அவதூறான கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
Related Tags :
Next Story