பிடித்தம் செய்த தொகையை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற மின் ஊழியர் மனைவியுடன் உண்ணாவிரதம்
பிடித்தம் செய்த தொகையை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற மின் ஊழியர் மனைவியுடன் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா குணமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலம் (வயது 61). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை தனது மனைவி சரோஜாவுடன் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், மனைவியுடன் அந்த அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செங்கமலம் கூறியதாவது:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அரியலூர் கோட்டம் தேளூர் துணை மின்நிலையத்தில் மஸ்தூராக பணிபுரிந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றேன். நான் பணிபுரிந்து காலத்தில் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்திற்கு பிடித்தம் செய்த தொகை இது நாள் வரை எனக்கு வழங்கப்படவில்லை.
மாற்றுத்திறனாளியான எனக்கு பணப்பயன், ஓய்வூதியம் வழங்கப்படாததால் பெருந்துன்பத்திற்கு உள்ளாகி உள்ளேன். எனவே பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது மனைவியுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக அதிகாரிகள் உண்ணாவிரதம் இருந்த செங்கமலத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிடித்தம் செய்த தொகையை பெற்று தருவதற்கு அதிகாரிகள் காலக்கெடுவும், உத்தரவாதமும் அளிக்கவில்லையாம். இதனால் செங்கமலம் மீண்டும் தனது மனைவியுடன் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.
பின்னர் அவரிடம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களை போன்று பிடித்தம் செய்த தொகையை பெறாமல் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் அதிகாரிகளுடன் பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு பிடித்தம் செய்த தொகையை பெற்று தருகிறோம் என்றனர். இதனை தொடர்ந்து மனைவியுடன் உண்ணாவிரதம் இருந்த செங்கமலம் மதியம் உண்ணாவிரதத்தை கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Tags :
Next Story