புதுவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நமச்சிவாயம் ஆதரவாளர் வெற்றி
புதுவை இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளரான ரமேஷ் வெற்றிபெற்றார்.
புதுச்சேரி,
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் இந்தமுறை கடும் போட்டி ஏற்பட்டது. முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ஆதரவுடன் லட்சுமிகாந்தனும், அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவுடன் ரமேசும் மேலும் 7 பேர்களும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்கள்.
இவர்களில் லட்சுமிகாந்தனுக்கும், ரமேசுக்கும் இடையே நடந்த போட்டி கடும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கடந்த 18, 19 தேதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தமுள்ள 22 ஆயிரத்து 2 வாக்காளர்களில் 14 ஆயிரத்து 73 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்தது. தொடக்கம் முதலே அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட ரமேஷ் முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் 6 ஆயிரத்து 709 வாக்குகளை பெற்று இளைஞர் காங்கிரஸ் தலைவராக வெற்றிபெற்றார். அவர் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து ஆசிபெற்றார்.
அவருக்கு அடுத்து வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ஆதரவாளரான லட்சுமிகாந்தன் 4 ஆயிரத்து 67 வாக்குகள் பெற்று துணைத்தலைவர் பதவியை பிடித்தார். மேலும் 962 வாக்குகளை பெற்ற வேல்முருகன், பெண்கள் பிரிவில் 173 வாக்குகள் பெற்ற ஜெய்னா, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 1003 வாக்குகள் பெற்ற காளிமுத்து ஆகியோர் துணைத்தலைவர்களாக தேர்வு பெற்றனர்.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ் 2 ஆயிரத்து 819 வாக்குகளும், தனவேலு எம்.எல்.ஏ. மகன் அசோக் ஷிண்டே 2 ஆயிரத்து 201 வாக்குகளும், பரணிதரன் 738 வாக்குகளும், அந்தோணி ஜோசப் 689 வாக்குகளும், நிஷா 657 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
இதேபோல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் 535 வாக்குகள் பெற்ற சசி குமார், பெண்கள் பிரிவில் 524 வாக்குகள் பெற்ற முத்தமிழ் வேலு, 121 வாக்குகள் பெற்ற சாந்தி என்ற அஞ்சலை, சிறுபான்மையினர் பிரிவில் 392 வாக்குகள் பெற்ற லப்பு, தாழ்த்தப்பட்ட பெண்கள் பிரிவில் 428 வாக்குகள் பெற்ற வைஷாலி, ஊனமுற்றோர் பிரிவில் 251 வாக்குகள் பெற்ற அருணாசலம் ஆகியோர் பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள்தவிர 30 தொகுதி தலைவர்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு துணைத்தலைவர் மற்றும் 13 பொதுச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story