திருச்சுழியில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - நாம் தமிழர் கட்சி
திருச்சுழி பகுதியில் சவுடுமண் என்ற பெயரில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
விருதுநகர்,
கலெக்டரிடம் திருச்சுழி தொகுதி நாம் தமிழர் கட்சி தலைவர் பழனிசாமி கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
திருச்சுழி பகுதியில் சவுடு மண் என்ற பெயரில் ஆற்றுமணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள பச்சேரி, சென்னல்குடி, திருச்சுழி, பனையூர், சேதுபுரம், சிம்பூர், கிழவனேரி ஆகிய பகுதிகளில் ஆற்று மணல் கொள்ளை அதிகமாக நடைபெற்று வருகிறது.
சவுடுமண் என்ற பெயரில் ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சுழி குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி கால்வாய் மற்றும் கண்மாயை தூர்வார வேண்டும். சென்னம்பட்டி கால்வாய் திட்டத்தினை நிறைவேற்றி தர வேண்டும். கல்லூரணி பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுண்ணாம்பு கல் குவாரியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story