சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்


சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
x
தினத்தந்தி 7 Sep 2018 11:30 PM GMT (Updated: 7 Sep 2018 7:51 PM GMT)

புதுவையில் சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்தனர்.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள கடைகளில் சிறிய ரக பட்டாசுகள் தற்போது பரபரப்பாக விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் தயாரான பட்டாசுகள் என்று கூறப்படும் இந்த பட்டாசுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு பொட்டலம் போன்று காணப்படும் இந்த பட்டாசை தூக்கி தரையில் போட்டாலோ, வீசி எறிந்தாலோ வெடிக்கிறது. மாணவர்கள் பலர் இதை வாங்கி பள்ளிகளிலும் வெடித்து விளையாடி வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய பட்டாசுகளுடன் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சட்டசபைக்கு வந்தனர். சட்டமன்ற வளாகத்தில் தரையில் அந்த பட்டாசுகளை வீசி வெடித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, இத்தகைய சீனாவில் தயாரான இந்தரக பட்டாசுகள் தற்போது மாணவர்கள் கைகளில் தாராளமாக புழங்குகிறது. இவை ஒட்டுமொத்தமாக வீசி வெடிக்கும்போது ஆபத்தை விளைவிக்கக்கூடும். எனவே இந்த பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


Next Story