மாவட்ட செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும், கலெக்டரிடம் கோரிக்கை மனு + "||" + Receive a complaint against the Rural Administrative Officer

கிராம நிர்வாக அலுவலர் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும், கலெக்டரிடம் கோரிக்கை மனு

கிராம நிர்வாக அலுவலர் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும், கலெக்டரிடம் கோரிக்கை மனு
கிராம நிர்வாக அலுவலர் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் தலைமையில் கலெக்டர் அன்புசெல்வனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கடலூர்,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலெக்டர் அன்புசெல்வனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் விருத்தாசலம் கோட்ட செயலாளர் கலையரசன் மீது பழிவாங்கும் எண்ணத்துடன் கொடுக்கப்பட்டுள்ள புகாரை வாபஸ் பெறுவதோடு, அவர் மீது போடப்பட்டுள்ள 17–பி மேமோவை ரத்து செய்ய வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கீதா, அன்புமணி ஆகியோருக்கு கொடுக்கப்பட்டுள்ள குற்றகுறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என விருத்தாசலம் கோட்டாட்சியரை கண்டித்து எங்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் புகார் செய்ய காரணமாக இந்த தாசில்தாரையும், இதற்கு உடந்தையாக இருந்த கோட்டாட்சியரையும் கண்டித்து நாளை(திங்கட்கிழமை) விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மாலை நேர தர்ணா போராட்டமும், வருகிற 19–ந் தேதி (புதன்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்க வேண்டும்; நிர்வாக ஆணையருக்கு மனு
விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணிகள் மேம்பட நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நியமிக்க அனுமதி வழங்குவதுடன் நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என கோரி நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
2. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
3. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கக் கோரும் வழக்கு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரும் வழக்கில், தமிழக அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
4. ஆபாச நடிகை சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்துக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி
ஆபாச நடிகை சன்னிலியோன் நடித்துவரும் வீரமாதேவி படத்துக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
5. கொங்கம்பாளையம் பகுதியில் செயல்படும் சாய –சலவை பட்டறைகளை மூடவேண்டும், பொதுமக்கள் மனு
கொங்கம்பாளையம் பகுதியில் செயல்படும் சாய–சலவை பட்டறைகளை மூடவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.