டவர் வேகன் தடம்புரண்டு விபத்து: ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம்


டவர் வேகன் தடம்புரண்டு விபத்து: ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 21 Sept 2018 4:26 AM IST (Updated: 21 Sept 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

மத்திய ரெயில்வேயின் கசாரா - உம்பேர்மாலி இடையே கடந்த 13-ந் தேதி நள்ளிரவு பராமரிப்பு பணிகள் நடந்தது.

மும்பை,

பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவர் வேகன் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 12 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக மத்திய ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை மும்பை கோட்ட ரெயில்வே மேலாளர் எஸ்.கே. ஜெயின் உறுதிப்படுத்தி உள்ளார்.


Next Story