மெக்கானிக் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை


மெக்கானிக் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 20 Sep 2018 10:57 PM GMT (Updated: 20 Sep 2018 10:57 PM GMT)

உசிலம்பட்டியில் மெக்கானிக் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி,


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிபவர் வீரக்குமார். இவர் பாரதிநகரில் குடியிருந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவருடைய மனைவி மருத்துவபரிசோதனைக்காக மதுரைக்கு சென்றிருந்தார். வீரக்குமார் மட்டும் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு வீரக்குமார் சென்றிருந்தாராம். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததாகவும் அவர், உள்ளே சென்றுபார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story