சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக நடந்த மண் பரிசோதனையை தடுத்து நிறுத்திய மக்கள்
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக நடந்த மண் பரிசோதனையை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
சேலம்,
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு பொதுமக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பாறையை துளைத்து மண் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை திடீரென முற்றுகையிட்டதுடன், பணியை தடுத்து நிறுத்தினர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காவிட்டால் திட்டமே கைவிடப்படும் என்று மத்திய அரசு வக்கீல்கள் கோர்ட்டில் உறுதி அளித்துள்ளனர். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், 8 வழிச்சாலை திட்டத்துக்காக மண் பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. 8 வழி சாலைக்காக அமைக்கப்படும் பாலங்களை தாங்கும் வகையில் அந்த இடம் இருக்கிறதா? என்பதை அறிய மண் பரிசோதனை பணி நடைபெற்றது. தற்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மண் பரிசோதனை நிறுத்தப்பட்டது என்றனர்.

இதனிடையே சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காவிட்டால் 8 வழி பசுமைச்சாலை திட்டம் கைவிடப்படும் என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் ஜருகுமலை பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணி போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பாறையை துளைத்து மண் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை திடீரென முற்றுகையிட்டதுடன், பணியை தடுத்து நிறுத்தினர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காவிட்டால் திட்டமே கைவிடப்படும் என்று மத்திய அரசு வக்கீல்கள் கோர்ட்டில் உறுதி அளித்துள்ளனர். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், 8 வழிச்சாலை திட்டத்துக்காக மண் பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. 8 வழி சாலைக்காக அமைக்கப்படும் பாலங்களை தாங்கும் வகையில் அந்த இடம் இருக்கிறதா? என்பதை அறிய மண் பரிசோதனை பணி நடைபெற்றது. தற்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மண் பரிசோதனை நிறுத்தப்பட்டது என்றனர்.
Related Tags :
Next Story