பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2018 4:15 AM IST (Updated: 23 Sept 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தொழிற்சங்க மாவட்ட தலைவர் முகமது இப்ராஹீம் தலைமை தாங்கினார். மனித நேய ஜனநாயக கட்சி தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் தோப்புத்துறை அப்துல் மஜீது, நாகை மாநில விவசாய அணி செயலாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், டாக்டர் அப்துல் கலாம் தேசிய கூட்டமைப்பு நிர்வாகி பாரதி செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி னர். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்டோக்களை கயிற்றால் கட்டி இழுத்து சென்று நூதன போராட்டம் நடத்தினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பரக்கத் அலி, பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர், யூசுப்தீன், செல்வமணி, சதக்கத்துல்லா, ஜலாலுதீன் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஷேக் பகுருதீன் நன்றி கூறினார்.
1 More update

Next Story