சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி பட்டாசுகள் பறிமுதல்; 3 பேர் கைது


சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி பட்டாசுகள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 4:15 AM IST (Updated: 23 Sept 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே குடோன் மற்றும் லாரி செட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள பட்டாசுகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பட்டாசு கடையின் உரிமையாளர் மற்றும் லாரி செட் உரிமையாளரை கைது செய்தனர்.

சிவகாசி,

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இயங்கி வரும் தனியார் குடோன்களில் அனுதியின்றி பட்டாசுகளை சிலர் பதுக்கி வைத்து இருப்பதாகவும் இதனால் விபத்து ஏற்பட்டால் அதிகஅளவில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வருவாய்த்துறையிருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து வருகிறது. அதன்படி வருவாய்த் துறையினர், போலீசாரின் துணையுடன் சில நாட்களுக்கு முன்பு ஒடு தீவிர சோதனை நடத்தி விதிமீறல் உள்ள கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜாவுக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் அவர் சிவகாசி–சாத்தூர் ரோட்டில் உள்ள சிவகாமிபுரம் காலனியில் உள்ள ஒரு பட்டாசுகடைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பட்டாசு கடையின் அருகில் இருந்து குடோனில் அனுமதி பெறாமல் பட்டாசு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை போல் இந்த கடையின் உரிமையாளர் அதே பகுதியில் வேறு ஒரு கட்டிடத்தில் எவ்வித அனுமதியின்றி பலதரப்பட்ட பட்டாசு பெட்டிகளை பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தெடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியுடன் அந்த குடோனில் இருந்த பட்டாசு பண்டல்கள் கணக்கெடுக்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும்.

இதே போல் சிவகாசி–சாத்தூர் ரோட்டில் ஒரு கட்டிடத்தில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையொட்டி அந்த கட்டிடத்தில் தாசில்தார் பரமானந்தராஜா, வருவாய் ஆய்வாளர் பாண்டி ஆகியோர் அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும். இது குறித்து அந்த லாரி செட்டின் உரிமையாளர் சாட்சியாபுரத்தை சேர்ந்த சுந்தரிடம் வருவாய்த்துறை யினர் விசாரணை நடத்தினர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து விஸ்வநத்தம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பட்டாசு கடையின் உரிமையாளர் ஜெயபால், லாரி செட் உரிமையாளர் சுந்தர் ஆகியோரை கைது செய்தனர். அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.


Next Story