தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து இலுப்பூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அன்னவாசல்,
புதுக்கோட்டை திலகர் திடலில் கடந்த 18-ந்தேதி தமிழக அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரை, தி.மு.க.நிர்வாகிகள் பொன்.ராமலிங்கம், பழனியப்பன் ஆகியோர் அவதூறாக பேசினர். இது தொடர்பான புகாரின்பேரில் பொன்.ராமலிங்கத்தை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக பேசிய, தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்தும், பழனியப்பனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று இலுப்பூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அ.தி.மு.க.வினர் இலுப்பூர் கோட்டைத்தெருவில் இருந்து ஊர்வலமாக, பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமசாமி, ஆறுமுகம் எம்.எல்.ஏ., அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், இலுப்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் குரு.ராஜமன்னார், இலுப்பூர் நகர செயலாளர் சத்யா ராஜேந்திரன், சத்திரம் கூட்டுறவு சங்க தலைவர் ரவிக்குமார், அன்னவாசல் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டானர். ஆர்ப்பாட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Tags :
Next Story