லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு டாக்டர் வீட்டில் ரூ.23 லட்சம் பறிமுதல்


லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு டாக்டர் வீட்டில் ரூ.23 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Sep 2018 10:55 PM GMT (Updated: 2018-09-23T04:25:23+05:30)

ராய்காட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சம்பவத்தன்று ஒருவர் மனைவியை பிரசவத்திற்காக சேர்த்தார்.

மும்பை,

அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர் விஜய் காவ்லி அவரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து காவ்லி, புகார்தாரரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் வாங்கிய போது டாக்டர் விஜய் காவ்லியை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்தநிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் டாக்டர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் டாக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story