செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் ரெயில் நேரத்தை மாற்ற வேண்டும், அதிகாரியிடம் மனு


செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் ரெயில் நேரத்தை மாற்ற வேண்டும், அதிகாரியிடம் மனு
x
தினத்தந்தி 29 Sept 2018 4:00 AM IST (Updated: 28 Sept 2018 11:00 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் இருந்து காலையில் மதுரைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் நேரத்தை மாற்றியமைக்க கோரி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

ராஜபாளையம்.

மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா கொல்லத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ரெயில்வே பணிகளை ஆய்வு செய்ய மதுரையில் இருந்து ரெயிலில் சென்றார். அப்போது ராஜபாளையத்தில் ரெயில்வே சீசன் டிக்கெட் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–

மதுரை–செங்கோட்டை இடையே பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காலையில் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரெயில் ராஜபாளையத்திற்கு 8.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. பின்னர் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே ரெயில் ராஜபாளையத்திற்கு தற்போது வருகின்றது.

நேரம் மாற்றப்பட்டு முன்னதாகவே வருவதால் மாதாந்திர பயணச்சீட்டு வைத்திருப்போர், வெளியூரில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய நேரத்திற்கு பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story