ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தவர் கைது


ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2018 3:30 AM IST (Updated: 1 Oct 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே மல்லாங்கிணறை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 52). இவரது மனைவி சுலோச்சனா (42). இவர்கள் இருவரும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன்(39) என்பவரிடம் ரெயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் பணம் பெற்றுள்ளனராம். வேலை வாங்கித்தராததோடு பணத்தையும் திருப்பித்தர மறுத்ததால் வீரபாண்டிய கட்டபொம்மன் இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுலோச்சனா மீது மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார்.

 போலீசார் அவர்கள் இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். சுலோச்சனாவை தேடி வருகின்றனர்.


Next Story