வேலூர்: வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது


வேலூர்: வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2018 4:21 AM IST (Updated: 10 Oct 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

வேலூர் வடக்கு போலீசார் கோட்டை சுற்றுச்சாலை, தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோட்டை சுற்றுச்சாலையில் பதுங்கியிருந்த 5 பேரை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 4 பேரையும் போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கொணவட்டத்தை சேர்ந்த ராமு (வயது 29), வெங்கடேசன் (31), சீனிவாசன் (20), பிரேம்குமார் (27) என்பதும், தப்பியோடிய நபர் சுரேந்தர் என்பதும், 5 பேரும் கூட்டாக சேர்ந்து வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், தோட்டப்பாளையத்தில் வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (23), லிங்கேஷ் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சைதாப்பேட்டை தமிழரசன், சேண்பாக்கம் சத்யா, முள்ளிப்பாளையம் சரண்ராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story