மாவட்ட செய்திகள்

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Between government hospitals to Virudhunagar Ramamurthy Road decide on the construction of the subway

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் இருபுறமும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில் ரோட்டின் கிழக்கு பகுதியில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ரோட்டின் இருபுறமும் அரசு ஆஸ்பத்திரியும், அரசு பிரசவ ஆஸ்பத்திரியும் உள்ளது. மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் இந்த இரு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ரோட்டை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளதால் இந்த இரு ஆஸ்பத்திரிகளுக்கும் இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வந்தனர்.

இறுதியில் இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு ரூ.2 கோடியில் மதிப்பீடு தயாரித்து சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தலைமை என்ஜினீயர் அனுமதி அளித்து அரசு ஆணை வெளியிட்ட பின்னர் இந்த திட்டப்பணி தொடங்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியிலேயே திட்டமதிப்பீடு தயாரித்து நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த வக்கீல் மாசிலாமணி, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே மேம்பாலம் தொடங்கும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயர், நெல்லை நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வை என்ஜினீயர், பரமக்குடி கோட்ட என்ஜினீயர், விருதுநகர் கோட்ட என்ஜினீயர் ஆகியோர் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘டிக்–டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு
‘டிக்–டாக்’ செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
2. கோடைகால சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: தனியார் பள்ளிகளில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் பள்ளிகளில் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
3. மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. பேராசிரியை நிர்மலாதேவி 22–ந்தேதி ஆஜராக வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு
பேராசிரியை நிர்மலாதேவி வருகிற 22–ந் தேதி ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.