மாவட்ட செய்திகள்

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது - திருமாவளவன் பேட்டி + "||" + DMK-Congress coalition will not crack

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது - திருமாவளவன் பேட்டி

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது - திருமாவளவன் பேட்டி
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது என திருமாவளவன் மதுரையில் பேட்டி அளித்தார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நடிகர் கமல்ஹாசன் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதன் அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த கூட்டணியில் உள்ளதால், கூட்டணியில் விரிசல் இல்லை என திட்டவட்டமாக கூறுகிறேன். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் தமது இயக்கத்தை இணைத்து கொண்டால் வரவேற்கிறேன்.

நெடுஞ்சாலை துறை டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளது என்ற வழக்கில் முகாந்திரம் இருப்பதால் தான் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முதல்–அமைச்சர் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால் விசாரணை செய்யலாம் என நீதிமன்றம் கூறி உள்ளதால் அவர் பதவி விலகுவது தான் சரியாக இருக்கும்.

நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் மாளிகை தொடர்ந்து விளக்கங்களை அளித்து வருவது கவர்னர் மாளிகையில் உள்ளவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதை தான் காட்டுகிறது. அந்த விவகாரம் சிறியது தான் என்றால் அவர்கள் ஏன் அதை பெரிதுபடுத்த பார்க்கிறார்கள் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசியலில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க.வை அகற்றுவோம் -கமல்ஹாசன்
தமிழக அரசியலில் இருந்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை அகற்றுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. காங்கிரஸ் மீது மாயாவதி தாக்கு; கர்நாடகா அமைச்சரவையிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. விலகல்
காங்கிரஸ் கட்சியை மாயாவதி விமர்சனம் செய்த நிலையில், கர்நாடகா அமைச்சரவையிலிருந்து அவருடைய கட்சி எம்.எல்.ஏ. விலகியுள்ளார்.
3. இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை
இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை நடத்தினார். அப்போது தனித்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
4. பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று, காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
5. ரூபாய் நோட்டின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி: நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி விட்டது - புதுவை மாநில காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரூபாய் நோட்டின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி விட்டது என புதுவை மாநில செயற்குழுவில் தெரிவிக்கப்பட்டது.