மீஞ்சூர் அருகே அனல் மின்நிலையத்தில் இரும்பு கம்பி திருட்டு; 2 பேர் கைது


மீஞ்சூர் அருகே அனல் மின்நிலையத்தில் இரும்பு கம்பி திருட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2018 10:00 PM GMT (Updated: 21 Oct 2018 7:11 PM GMT)

மீஞ்சூர் அருகே அனல் மின்நிலையத்தில் இரும்பு கம்பி திருட்டு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னேரி,

மீஞ்சூரை அடுத்த வாயலுர் ஊராட்சி எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 660 மெகாவாட் கொண்ட புதிய அனல் மின்நிலையம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு கட்டுமான பணிக்கு தேவையான இரும்பு பொருட்கள் பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை உயர்ந்த ¾ டன் இரும்பு கம்பிகள் திருட்டு போனதாக ஒப்பந்த நிறுவன மேலாளர் பவித்ரா காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் திருவெள்ளைவாயல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் கடையில் இருந்து இரும்பு கம்பியை மினிலாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீஸ் விசாரணையில் இந்த இரும்பு கம்பிகள் எண்ணூர் சிறுப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் இருந்து திருடப்பட்டவை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பழவேற்காடு பகுதியை சேர்ந்த கரிமுல்லா(வயது 54), நந்தியம்பாக்கத்தை சேர்ந்த திலீப் பாண்டி (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து இரும்பு கம்பியை மினி லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story