‘தமிழகம் அனைத்து துறைகளிலும் மோசமாக உள்ளது’ வைகோ குற்றச்சாட்டு
தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் மோசமாக உள்ளது என்று பரமத்திவேலூர் அருகே நடந்த திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றிய ம.தி.மு.க. செயலாளரும், கபிலக்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவருமான மணி இல்ல திருமண விழா பரமத்திவேலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு நாமக்கல் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். கபிலர்மலை ஒன்றிய செயலாளர் மணி வரவேற்றார். மாநில சட்டத்திருத்த குழு உறுப்பினர் பழனிசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கணேசன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மகி(என்ற) கிருஷ்ணமூர்த்தி, கபிலர் மலை ஒன்றிய அவைத்தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ம.தி.மு.க. கழக பொருளாளர் கணேசமூர்த்தி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் நீலாம்பிகை சுப்பையன், மாநில கலைத்துறை துணை செயலாளர் சுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் சசிகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களான ஸ்ரீதரன், விசாலாட்சியை வாழ்த்தினார். அதன் பிறகு அவர் பேசியதாவது:-
லட்சியத்திற்காகவும், பிடித்த தலைவர்களுக்காகவும் ஓட்டு போடுங்கள். பணத்திற்காக ஓட்டு போட்டால் நம்மை விற்பதற்கு சமமாகும். தேர்தல் வந்தாலே மக்களுக்கு மகிழ்ச்சி. அதுவும் இடைத்தேர்தல் வந்தால் அதை விட மகிழ்ச்சி. சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி வரையிலும், பாராளுமன்ற தேர்தலுக்கு ரூ.30 கோடி வரையிலும் கட்சியினர் செலவு செய்கின்றனர்.
எங்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தேர்தலுக்காக வசூல் செய்த பணம் வெறும் ரூ.7½ கோடி மட்டும் தான். ம.தி.மு.க.வினர் என்றாலே மரியாதை தனி. எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் படைவீரர்கள் போன்றவர்கள். லட்சியம் பொதுவாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள். தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி காரணமாக தமிழகம் அனைத்து துறைகளிலும் மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ஒன்றிய செயலாளர் வசந்தம் பொன்னுசாமி, சுப்பிரமணி, மல்லை கணேஷ், குருசாமி, சதாசிவம், சுபாஷ், சந்திரபோஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சேகர், பேரூர் காக செயலாளர் அன்பழகன், இளங்கோவன், சிவம், சீனிவாசன், ஜோதிபாசு, மாவட்ட துணை செயலாளர் ராமசாமி, கபிலர் மலை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மதிவாணன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story