காங்கேயம் தேங்காய் எண்ணெய் ஆலையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பருப்பு எரிந்து நாசம்


காங்கேயம் தேங்காய் எண்ணெய் ஆலையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பருப்பு எரிந்து நாசம்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:21 PM GMT (Updated: 23 Oct 2018 10:21 PM GMT)

காங்கேயத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தேங்காய் பருப்பு எரிந்து நாசமானது.

காங்கேயம், 


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகரில் திருப்பூர் ரோட்டில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று காலை 11.30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கு தேங்காய் பருப்பை சூடேற்றும் கலனில் இருந்து திடீரென புகை வந்தது.

இதை தொடர்ந்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் சு.மதுரைவீரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆலையின் ஒரு பகுதியில் ஒரே புகை மண்டலமாக இருந்ததால் தீயை அணைக்க மிகவும் சிரமப்பட்டனர். இந்த தீவிபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சுமார் 12 டன் தேங்காய் பருப்பு தீயில் கருகி சேதமானது. மேலும் தேங்காய் பருப்பை சூடாக்கும் கலனும் சேதமடைந்தது. இந்த தீ விபத்தால் ரூ.10 லட்சம் தேங்காய் பருப்பு கருகி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

Next Story