மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் - 14ந் தேதி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு
கட்டிடங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து 14ந் தேதி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை,
அனைத்து தனியார் கட்டிடங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் போன்றவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளும் செய்து வருகிற 14-ந் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மகிழேந்தியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித தடையின்றி சென்று வர ஏதுவாக வழிவகை செய்ய வில்லை. மாற்றுத் திறனாளிகள் சென்று வரும் வகையில் அனைத்து கட்டிடங்களிலும் ரோட்டில் இருந்து கடையின் முகப்பு வரை செல்ல சாய்வு தள வசதி, முதல் மாடி மற்றும் மற்ற தளங்களுக்கு செல்ல ஏற்ற வகையில் லிப்ட் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை செய்துதர வேண்டும்.
இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எடுத்து கூறியும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. மேலும் திருவண்ணாமலை நகராட்சி முழுவதும் ஏற்படுத்தப்பட்டு உள்ள கழிப்பறைகளை சக்கர நாற்காலி அல்லது வேறு உபகரணங்கள் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.
மேலும் அரசு மற்றும் தனியார் வணிக வளாகங்கள், வங்கிகள், திருமண மண்டபங்கள், ஏ.டி.எம். மையங்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தினார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் வணிக வளாகங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், உணவகங்கள், ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகள் ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரோட்டில் இருந்து கடையின் முகப்பு வரை செல்ல சாய்வு தளம் அமைக்க வேண்டும். முதல் மாடி மற்றும் மற்ற தளங்களுக்கு செல்ல ஏற்ற வகையில் லிப்ட் வசதி செய்யப்பட வேண்டும். கழிப்பறை வசதி செய்யப்பட வேண்டும். தேவையான அளவு பார்க்கிங் வசதி செய்யப்பட வேண்டும்.
இந்த வசதி ஏற்படுத்தப்பட்ட அறிக்கையினை வருகிற 14-ந் தேதிக்கு முன்பாகவே திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் நகராட்சி ஆணையாளர், அனைத்து வங்கிகள் கூட்டமைப்பு தலைமை அலுவலர், திருவண்ணாமலை அனைத்து திருமண மண்டபங்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர், அனைத்து தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத்தலைவர், அனைத்து வணிகர் சங்கங்களின் தலைவர் ஆகியோர் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story