பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.4.43 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
பெங்களூரு விமான நிலையத்தில் சுங்கத்துறை-வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4.43 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
பக்ரைன் நாட்டை சேர்ந்த 5 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் நுண்ணறிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்கள் மற்றும் அந்த விமானங்களில் இருந்து இறங்கி வரும் பயணிகளிடம் தீவிர சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, ஒரு விமானத்தின் உள்ளே இருக்கைக்கு அடியில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 200 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். இந்த தங்க கடத்தல் நடவடிக்கையில் விமானத்தில் பணி செய்யும் ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதேபோல், சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த நூருலாய்னி என்ற பெண் தான் கொண்டு வந்த பையின் உள்ளே மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.3 கோடி மதிப்பிலான 9.200 கிலோ தங்க கட்டிகளை வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வேளையில், அந்த பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். இருப்பினும், அவர் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டி உள்ளதால் அந்த பெண் பற்றிய விவரங்களை அதிகாரிகள் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி உள்ளனர்.
இதுதவிர, பக்ரைனில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக பக்ரைன் நாட்டை சேர்ந்த 5 பேர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் தங்களின் ஆடைகளின் உள்ளே மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.38 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 200 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Tags :
Next Story