விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
விபத்தில்லாமல்...தமிழக அரசால் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், புனித தளங்கள் ஆகியவை உள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல், ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒத்துழைப்புபெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. ஒலியினைக் குறைத்து செவியினை காக்க வேண்டும். திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா, மாசில்லா தீபாவளி கொண்டாடிட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.