நாச்சியார்கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கைது 89 பவுன் நகைகள் பறிமுதல்


நாச்சியார்கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கைது 89 பவுன் நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Nov 2018 3:45 AM IST (Updated: 5 Nov 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

நாச்சியார்கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 89 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கடைவீதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகம்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருநரையூர் தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது41), திருமலைராஜபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்த ஜெயசீலன் (45), மேலவிசலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நீலகண்டன் (45) ஆகியோர் என்பதும், அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டில் நாச்சியார்கோவில் அருகே சமத்தனார்குடி பகுதியில் வீடு புகுந்து 50 பவுன் நகைகள் திருடியதும், திருச்சேறை அருகே செண்பகக்கொல்லை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகைகள் திருடியதும், மருதாநல்லூரில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

89 பவுன் நகைகள் பறிமுதல்

இதையடுத்து நாச்சியார்கோவில் போலீசார் 3 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 89 பவுன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story