மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் இரட்டை கொலை: சரணடைந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணை + "||" + Ramanathapuram double murder: Teenager who surrendered investigation

ராமநாதபுரம் இரட்டை கொலை: சரணடைந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணை

ராமநாதபுரம் இரட்டை கொலை: சரணடைந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணை
ராமநாதபுரத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சரணடைந்த வாலிபரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கடந்த 16–ந்தேதி மாலை வாலாந்தரவையை சேர்ந்த கார்த்திக் மற்றும் கருவேப்பிலைக்கார தெருவை சேர்ந்த விக்னேஷ்பிரபு ஆகியோரை காரில் வந்த மர்ம கும்பல் வெடிகுண்டுவீசி தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. பரபரப்பான இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் சரணடைந்த நிலையில் கேணிக்கரை போலீசார் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் இச் சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாலாந்தரவை அம்மன்கோவில் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் தவம்அறிவழகன்(வயது 26) என்பவர் கடந்த மாதம் 31–ந்தேதி புதுக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே கேணிக்கரை போலீசார் வழக்கு விசாரணைக்காக தவம்அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்–2ல் மனுத்தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராதாகிருஷ்ணன் 2 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் தவம் அறிவழகனிடம் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவம்அறிவழகன் இரட்டைகொலை சம்பவத்தின்போது காரை ஓட்டி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. டோம்பிவிலியில் பெண் கொலை; உடன் வசித்து வந்த வாலிபருக்கு வலைவீச்சு
டோம்பிவிலியில் இளம்பெண்ணை கொலை செய்ததாக அவருடன் வசித்து வந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
2. துறையூர் அருகே கொத்தனார் கழுத்தை நெரித்து கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
துறையூர் அருகே கொத்தனாரை கழுத்தை நெரித்து கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள்; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
தேவகோட்டையில் பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டது தொடர்பாக 7 மாணவர்கள் பிடிபட்டனர். இந்த சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி? என்பது குறித்து அந்த 7 பேரும் போலீசாரிடம் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
4. அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
திருவாரூரில், அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. மதுரை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை; போலீஸ் தேடும் வாலிபரின் அண்ணன் திடீர் சாவு
சோழவந்தான் அருகே முன்விரோதத்தில் கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தேடப்படும் வாலிபரின் அண்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.