வெவ்வேறு இடங்களில் ரூ.16 லட்சம் போதைப்பொருளுடன் 4 பேர் சிக்கினர்


வெவ்வேறு இடங்களில் ரூ.16 லட்சம் போதைப்பொருளுடன் 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:37 PM GMT (Updated: 16 Nov 2018 11:37 PM GMT)

மும்பையில் வெவ்வேறு இடங்களில் ரூ.16 லட்சத்து 14 ஆயிரம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நைஜீரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

மும்பை லோயர் பரேல் மதூர்தாஸ் மில் காம்பவுண்டு பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடந்து வருவதாக ஒர்லி போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கெண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனையிட்டனர்.

இதில், எம்.டி. என்ற போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் லஷ்மண் ராஜன் (வயது28) என்பது தெரியவந்தது.

அந்தேரி மேற்கு மேம்பாலத்தின் கீழ் போதைப்பொருள் விற்பனை நடந்து வருவதாக பாந்திரா போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த சின்சோசா உடியோகு (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள எம்.டி. என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

குர்லா கல்பனா சினிமா திரையரங்கம் அருகே போதைப்பொருளுடன் நின்று கொண்டிருந்த அஸ்கர்அலி சேக் (42) என்பவரை ஆசாத் மைதான் போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில் காந்திவிலி போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு வேனில் போதைப்பொருள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி போலீசார் மால்வாணி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த வழியாக வந்த வேனை வழிமறித்து சோதனை நடத்தினர். இதில் வேனில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள சரஸ் என்ற போதைபொருள் சிக்கியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சலீம் ஹபீப் கான் (55) என்பவரை கைது செய்தனர்.

மேற்படி 4 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சத்து 14 

Next Story